Thursday, January 16, 2020

கலை

நிறங்கள் பல கூடி
உண்டானது ஓவியம்...
உணர்வுகள் பல சேர்த்து
ஒன்றாவது காவியம்...
மலர்கள் தெரிந்தெடுத்து
உருவான மலர்ச்சரம்...

துளிகள் ஒன்றினைந்து
வழிந்தோடும் ஓடைகள்...
அழகை அள்ளித்தெளித்து
நறுமணத்து
உதிரும் மலர்கள்...
வருடந்த்தோறும் உதிர்ந்து
முளைக்கும் இலைகள்....
எதுவும் அதிசயப்பதில்லை
தன் பிறப்பின் நோக்கத்தை!





Friday, June 5, 2009

இரவில் ஓர் துறைமுகம்



மக்கள் நடமாட்டமுள்ள
உயிரோட்டமுள்ள இடங்கள் பல
பார்த்ததுண்டு.
மக்கள் நடமாட்டமே இல்லாத
உயிரோட்டமுள்ள
இடங்களில் ஒன்று
துறைமுகம் அதுவும்
இரவில்!!!

இல்லாத ஆழத்தை
அதிகமாய் காட்டவும்
விளக்குகளின் பிம்பத்தில்
உயரத்தை கூட்டவும்
இரவுக்குத் தெரியும்!!!

அலைகள் இல்லாத
கருங்கடலில் மெத்தென்று
மிதக்கும் சிறு படகுகளின்
தாலாட்டு அசைவுகளும்
பெரிய கப்பல்களின்
ஒலி பெருக்கிகளும்
இங்கும் தண்ணீர் தான்
என்று சொல்லி அசைந்து வரும்
தொலைதூர சரக்கு கப்பல்களும்
தூங்காத துறைமுகத்தின்
நிஜ முகங்கள்!!!

Monday, January 19, 2009

Puthagam

தேடி தேடி

கலைத்த பின்னும்

உற்சாகம் தரும்

காகித தொகுப்பு.

Saturday, April 12, 2008

மொழி

தாய் மொழி நீ
மறந்தபோதும்
உன் மொழி நான்
புரிந்த போதும்
நம் காதல்

ப ச தொ டங்கியது !

Wednesday, March 26, 2008

ெவற்று மரம்

லயுதிர் காலமும்
இனிக்கும்
வசந்தம்
அருக வருவதால் !

ஜன்னல் பயணம்

அயரவக்கும் நெடுந்தூரப்
பேருந்து பயணம்
நிறுத்தம் வர ,
ஏங்கும் மனம்
நீள முடியா
பயணதிற்காய்!