Thursday, January 16, 2020

கலை

நிறங்கள் பல கூடி
உண்டானது ஓவியம்...
உணர்வுகள் பல சேர்த்து
ஒன்றாவது காவியம்...
மலர்கள் தெரிந்தெடுத்து
உருவான மலர்ச்சரம்...

துளிகள் ஒன்றினைந்து
வழிந்தோடும் ஓடைகள்...
அழகை அள்ளித்தெளித்து
நறுமணத்து
உதிரும் மலர்கள்...
வருடந்த்தோறும் உதிர்ந்து
முளைக்கும் இலைகள்....
எதுவும் அதிசயப்பதில்லை
தன் பிறப்பின் நோக்கத்தை!