மக்கள் நடமாட்டமுள்ள
உயிரோட்டமுள்ள இடங்கள் பல
பார்த்ததுண்டு.
மக்கள் நடமாட்டமே இல்லாத
உயிரோட்டமுள்ள
இடங்களில் ஒன்று
துறைமுகம் அதுவும்
இரவில்!!!
இல்லாத ஆழத்தை
அதிகமாய் காட்டவும்
விளக்குகளின் பிம்பத்தில்
உயரத்தை கூட்டவும்
இரவுக்குத் தெரியும்!!!
அலைகள் இல்லாத
கருங்கடலில் மெத்தென்று
மிதக்கும் சிறு படகுகளின்
தாலாட்டு அசைவுகளும்
பெரிய கப்பல்களின்
ஒலி பெருக்கிகளும்
இங்கும் தண்ணீர் தான்
என்று சொல்லி அசைந்து வரும்
தொலைதூர சரக்கு கப்பல்களும்
தூங்காத துறைமுகத்தின்
நிஜ முகங்கள்!!!